Wednesday, October 22, 2008

நல்ல பழமொழி

இன்று நான் கேட்டு அறிந்த ஒரு நல்ல பழமொழி உங்களுக்காக...

சொந்தமா சோறு வடிச்சு திங்க தெரிஞ்சவனுக்கு பொண்ணு குடுக்காதே

இந்த பழமொழி மூலமா உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க பார்க்கலாம். அதாவது ஒரு சமைக்க தெரிஞ்ச பயலுக்கு உங்க பொண்ண கட்டி குடுக்குறத வச்சுக்குவோம். அவன் என்ன பண்ணுவான், பொண்டாட்டி கூட இருக்குற வரை சந்தோசமா இருப்பான். நாளைக்கே ஒரு பிரச்சினை வந்துச்சுன்னா அந்த பொண்ணு கண்ணா கசக்கிகிட்டு அதோட அம்மா வீட்டுக்கு போகும். போனது ரெண்டு நாள்ல திரும்பி சமாதானமாகி வந்துச்சுன்னா பிரச்சினை இல்லை. நம்ம பயலும் எதுனாலும் ஓட்டல்ல சாப்பாடு சாப்பிட்டு இருந்துடுவான்.

( பி.கு - எத்தனை நாள் தான் ஓட்டலே கதின்னு கெடக்குறது. இவனுக்கு தான் இப்போ வீட்டு சாப்பாடு ருசி தெரிஞ்சதுக்கு அப்பறம். ருசி கண்ட பூனை சும்மாவா இருக்கும். எனக்கு தெரிஞ்சு ஊர்ல இருக்குற பாதி bachelors கல்யாணம் பண்றதே நல்ல சாப்பாட்டுக்கு தான்.)

இதே இப்போ இவனுக்கு சமைக்க தெரிஞ்சு இருந்ததுன்னா, பொன்னும் சண்ட போட்டுட்டு போனவ ரொம்ப நாளாக திரும்பாம இருந்தா நம்ம பயலும் ரெண்டு நாள் ஓட்டல் சாப்பாடு சாப்டுட்டு வெறுத்து போயி அவனே சமைச்சு சாப்பிட ஆரம்பிச்ச்சுடுவான் ( ஒரு வேலை சண்டை ரொம்ப பெருசா இருந்ததுன்னா.) அப்பறம் அவனுக்கு பொண்டாட்டி ஞாபகமாவது வர்றதாவது.

இந்த ஒரு காரணத்துக்கு தான் இந்த பழமொழி வந்ததுன்னு நான் நினைக்குறேன்.

No comments:

Post a Comment