விபத்துக்குள்ளான விமானம் குறித்த முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கறுப்பு பெட்டி ஆகும்.
விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் (எப்.டி.ஆர்.) என்பதே `கறுப்பு பெட்டி` என பொதுவாக அழைக்கப்படுகிறது.
இந்த பெட்டியின் மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீப்பிடித்தாலோ, தட்பவெப்ப நிலையில் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும், எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால்பகுதியில் இந்த பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர் குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே, விபத்து நடந்தபோது நிலவிய சூழ்நிலையை அறிந்து கொள்ள முடியும்.
இத தவிர, கருப்பு பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப்பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், என்ஜின் இரைச்சல் என அனைத்து வித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக, விபத்து நடந்தபோது பரிமாறப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கறுப்பு பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள விமான ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானி டேவிட் வாரன் என்பவர், கடந்த 1953-ம் ஆண்டு கறுப்பு பெட்டியை கண்டு பிடித்தார்.
உலகிலேயே விமானத்தில் கறுப்பு பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது, ஆஸ்திரேலிய நாடு. 1960-ம் ஆண்டில் அது அமலுக்கு வந்தது. `கறுப்பு பெட்டி` என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கு பிறகு, எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடிக்கின்றனர்.